அமெரிக்க ஓபன் டென்னிஸ் : நம்பர் ஒன் வீரர் திடீர் தகுதி நீக்கம்

0
245
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆட்டம் தொடங்கியது முதல் ஜோகோவிச் தடுமாற்றத்துடன் ஆடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் வேகமாக அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த நடுவரின் மீது பட்டதில் அவர் காயமடைந்தார். இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார். ஆனாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா காலிறுதிக்கு முன்னேறினார்.
Previous articleஇன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Next articleகொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்! ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த மட்டமான செயல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here