ARS ஸ்டுடியோ விரிவாக்கம் என்ன? பின்னணி என்ன? பரிசாக கொடுத்த மக்கள் சொத்து!

0
2557
#image_title

ஏ ஆர் எஸ் அம்பிகா ராதா சரசம்மா இதுதான் இதனுடைய முழு விரிவாக்கம். கேரளாவில் காங்கிரஸ் கட்சிகளின் பெண் தலைவராக இருந்த ஒருவர்தான் சரசம்மா அவருடைய இரண்டு பெண் பிள்ளைகள் தான் அம்பிகா மற்றும் ராதா.

 

தன் பிள்ளைகளை எப்படியாவது சினிமாவிற்குள் நுழைய விட வேண்டும் .கேரளா அதற்கு சரிவராது என்று, தமிழகம் அனுப்புகிறார் சரசம்மா!

 

அம்பிகா ராதா இருவரும் தெலுங்கு சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் கொடிகட்டி பறக்க தொடங்கினர்.

 

அப்பொழுது ஹவுசிங் போர்டு மினிஸ்டர் ஆக இருந்த திருநாவுக்கரசு அம்பிகா ராதாவை ஏற்பாடு செய்து எம் ஜி ஆர் இடம்  நிலம் வேண்டும் என்று கேட்க சொல்லி இருக்கிறார்.

 

அம்பிகா ராதா சரசம்மா மூவரும் எம்ஜிஆரை பார்க்கச் சென்று எம்ஜிஆர் இன் காலில் விழுந்திருக்கின்றனர். எங்களுக்கு ஏவிஎம் ஸ்டுடியோவை போல ஒரு ஸ்டூடியோ வைக்க வேண்டும் அதற்கு எங்களுக்கு நிலம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

 

உடனே எம்.ஜி.ஆரும் திருநாவுக்கரசை அழைத்து இவர்களுக்கு ஒரு ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்து விடு என்று சொல்லி இருக்கிறார். ஆனால் திருநாவுக்கரசு அவர்களுடைய கூட்டாளி அதனால் ஐந்து ஏக்கருக்கு பதிலாக ஏகப்பட்ட ஏக்கரங்களையும் கொடுத்துள்ளார்.

 

இதனை எப்படியோ அறிந்த பாரதிராஜா தாம் தான் அவர்களை எம்ஜிஆருக்கு அறிமுகப்படுத்தினோம். அவர்களுக்கு மட்டும் நிலம் எப்படி என்று பாரதிராஜா கேட்க குருவான பாரதிராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அவருக்கும் கொஞ்சம் இடம் எடுத்து இருக்கிறார்கள். பின் அந்த இடத்தை பாரதிராஜா விற்றுவிட்டு வெளியே வந்து விட்டார்.

 

இப்படி அரசு நிலத்தை இனாமாக கொடுத்தது தான் அந்த ஏ ஆர் எஸ் ஸ்டுடியோ அங்கு இப்பொழுது சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது.

 

அதை எம்ஜிஆர் தான் விளக்கேற்றி வைத்த துவங்கி வைத்தார்.

author avatar
Kowsalya