போடப்படுகிறதா முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

0
122

நோய்த்தொற்று பரவல் மிகக் கடுமையாக பரவிக்கொண்டிருக்கிறது இதற்கிடையில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் நாட்கள் செல்லச் செல்ல நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பல தரப்பினரும் முழுமுடக்கம் மட்டுமே முழுமையான தீர்வு என்று தெரிவித்து வருகிறார்கள்.அதோடு பல மாநிலங்களில் மற்றும் அடக்கம் போடப்பட்டு இருப்பதால்தான் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், காவல்துறை இயக்குனர் திரிபாதி, சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் போன்றோர் பங்கேற்றார்கள்.

அந்த சமயத்தில் உரையாற்றிய ஸ்டாரின் மக்களுடைய உயிரை காக்க வேண்டிய பணியில் தமிழக அரசுடன் நீங்கள் அனைவரும் தோளோடு தோள் நிரப்பினர்கள் என்று நான் நம்புகிறேன் என்று அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். அதோடு எதிர்வரும் காலத்தில் மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் ஆக்சிஜன் இருப்பு, படுக்கைகள், போன்றவற்றின் தேவை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை நாம் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் அதிகப்படியான செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை நோய் தொற்று பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அவசர மற்றும் அவசிய தேவை எழுந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் எல்லோரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் உண்மையை நேருக்கு நேராக சந்தித்தால் மட்டுமே நம்முடைய பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என்ற காரணத்தால், அதிகாரிகள் ஒளிவுமறைவும் இல்லாமல் பணி புரியுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

இவ்வாறான சூழ்நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக திங்கள்கிழமை முதல் முழு விளக்கம் அமலுக்கு வர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அதோடு சேர்த்து திங்கள்கிழமையும் முழு முடக்கம் பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleபதவியேற்பு நாளில் திமுகவின் எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட சோகம்!
Next articleகைது செய்யப்பட்ட வானதி ஸ்ரீனிவாசன்! வலைதள பக்கத்தில் எழுப்பிய அதிரடி கேள்வி!