கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு சேரும் நிதி! இவ்வளவு கோடிகளா?
கடந்த ஒரு வருடமாகவே கொரோனாவின் தொற்று காரணமாக நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு மிகவும் நிதி நெருக்கடி மற்றும் உயிர் சேதங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக இரண்டாம் அலையில் மக்கள் அனைவரும் சொல்லொண்ணா துயரை அனுபவித்தோம்.
அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் என அவர்களது பங்கு எண்ணிலடங்காதது. மேலும் மருத்துவர்கள் இல்லை என்றால் நினைத்து பாருங்கள் நம்மளது நிலைமை எல்லாம் என்ன வென்று. இரண்டாம் அலையில் கொரோனா மிக தீவிரமாக செயல்பட்டு அதிக உயிர்களை கொள்ளை கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிலும் கர்ப்பிணி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மக்களுக்காக தன் உயிரையும் துச்சமென கருதி மக்கள் தொண்டு ஆற்றினார்கள். ஆனால் அவர்களையும் கொரோனா விட்டு வைக்காமல் உயிர் எடுத்து விட்டது. அதிலும் இரண்டாம் அலையில் மட்டும் 650 மருத்துவர்களை நாம் ஒட்டு மொத்தமாக இழந்திருக்கிறோம்.
கோரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தற்போது அந்த குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கி மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என தமிழக அரசு முன்னதாகவே அறிவித்திருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என உயிரிழந்த 34 பேரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் என 8.5 கோடி நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது