நோ பேண்ட்.. நோ டவுசர் – ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் ரெஜினா வெளியிட்ட போட்டோ

0
154
Regina Cassandra-Latest Tamil Cinema News Today
Regina Cassandra-Latest Tamil Cinema News Today

நோ பேண்ட்.. நோ டவுசர் – ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் ரெஜினா வெளியிட்ட போட்டோ

தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் ரெஜினா கசாண்ட்ராவும் ஒருவர். இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார்.சென்னையை சேர்ந்தவரான இவர் இள வயதில் குழந்தைகளுக்கான ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.

ஆரம்பத்தில் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார். பின்னர் அதே குறும்படம் 2012 இல் அதே பெயரில் முழு நீளப்படமாகவும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் தெலுங்கு திரையுலகில் 2012 ஆம் ஆண்டு வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி என்ற படத்தின் மூலமாகவும்,கன்னட மொழியில் 2010 ஆம் ஆண்டு வெளியான சுர்யகாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாகவும் அறிமுகமானார்

ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்த ரெஜினா கசாண்ட்ரா, 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்டநாள் முதல் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகை லைலாவிற்கு தங்கையாக இவர் நடித்திருப்பார்.

இதன் பின்னர் விமல்,சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவியுடன்  கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் பிரபலமானார். இவர் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகையாக பிரபலம் ஆனார். மேலும் இவர் தமிழில் ராஜதந்திரம், பார்ட்டி, Mr.சந்திரமௌலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் இவர் கருங்காப்பியம், பார்டர் மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எந்த மொழியாக இருந்தாலும் நடிகைகள் என்றாலே கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது வாடிக்கையாகிவிட்டது.அந்த வகையில் இவரும் ஆரம்பத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்திருந்தாலும் நாளடைவில் கவர்ச்சிக்கும் ஓகே சொல்லிவிட்டார்.குறிப்பாக இவர் கலந்து கொண்ட விருது நிகழ்ச்சிகள்,சமூக வலைத்தளங்கள் என அனைத்திலும் கவர்ச்சியாக தோன்ற ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் தற்போது நடிகை ரெஜினா இதுவரை திரைப்படங்களில் கூட நடிக்காத அளவிற்கு இவரு என்ற வெப் சீரிஸில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக இந்த வெப் சீரிஸில் ரெஜினா கசாண்ட்ரா அளவுக்கு மீறிய கவர்ச்சியை காட்டியிருப்பதால் இந்த வெப்சீரிஸ் மிகவும் பிரபலமாகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் மேலும் இவர் அடுத்தடுத்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான அவருடைய கவர்ச்சி புகைப்படம் படு வைரலாக பரவி வருகிறது.

இதில் பேண்ட் அல்லது டவுசர் இருக்கா இல்லையா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் போட்டோ வெளியிட்டு அவரது ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

author avatar
CineDesk