இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

0
178
Further benefits such as housing allowance 2000 for them! Super announcement released by the Chief Minister!
Further benefits such as housing allowance 2000 for them! Super announcement released by the Chief Minister!

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர்களின் நலனுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எனது தந்தை கருணாநிதி அவர்கள் ஆட்சி புரியும் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி துறை உருவாக்கப்பட்ட அவரது நேரடி கவனத்தில் இருந்தது. அவர் வழி வரும் நானும் இவர்களின் மேல் தனி கவனிப்பை வைத்துள்ளேன். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை தற்போது ஆயிரத்திலிருந்து 2000 ஆக உயர்த்தி வழங்கி உள்ளோம்.

இதனால் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர். அதேபோல மனநலம் பாதிப்படைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தொழில் தொடங்குவதற்கு கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு என்ற நிலையை மாற்றியுள்ளோம். அதுமட்டுமின்றி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடன் தொகை வாங்கும் வயது 45 இல் இருந்து 50 ஆக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளோம்.

இதோட பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்ய உதவியாக இருக்க ஒருவருக்கு அனுமதி வழங்கியுள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்க 5% ஒதுக்கீடு செய்துள்ளோம். நாளடைவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டுமனை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளில் யாரேனும் கடை நடத்த விருப்பப்பட்டால் மற்றவர்களை தாண்டி இவர்களுக்கு முதலில் அனுமதி வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி இவர்கள் அரசு வளாகங்களில் ஆவின் மையம் வைப்பதற்கு முன் தொகை அளிக்கப்படும். அரசு பணிகளிலும் இவர்களுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேலையின்மையை போக்க தனியார் நிறுவனங்களில் இவர்களுக்கான பணியிடங்கள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு வின் அறிவுரைப்படி சரியான வேலைகளில் மாற்றுத்திறனாளிகள் அமர்த்தப்படுவர்.

Previous article10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்!
Next articleதி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மருத்துவமனையாக மாற்றமா?