திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டை சூறையாடிய கும்பல்!!

0
155
#image_title

புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அகற்றியதால் ஆத்திரம் – உறவினர்களோடு சென்று திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், இருசக்கர வாகனத்தை கற்களை கொண்டு சூறையாடிய கும்பல். 7 பெண்கள், 7 ஆண்கள் என 14 பேர் கைது, அடையாளம் தெரியாத 50 பேர் மீது வழக்குபதிவு.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரப்பேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டியிருந்த வீட்டை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் வீட்டை அகற்றிய ஆத்திரத்தில், திராவிட விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் திலீபனின் வீட்டை மர்மகும்பல் கற்களைக்கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெமிலி அடுத்த பெரப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (எ) திலீபன். திராவிட விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ரவி என்பவர் ஆக்கிரமித்து கட்டிய வீட்டை அகற்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வீட்டை இடித்து அகற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பித்த நிலையில், அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு JCB உதவியோடு வீட்டை அகற்றினர்.

இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக திலீபனின் வீட்டை முற்றுகையிட்ட மர்மகும்பல், கற்களை கொண்டு ஜன்னல் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாணாவரம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 7 ஆண்கள் 7 பெண்கள் என 14 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தாக்குதலில் தொடர்புடையதாக அடையாளம் தெரியாத 50 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleராகுல்காந்தியின் தண்டனை தீர்ப்புக்கு! நீதிபதிகளுக்கு பதவி உயர்வா?  உச்சநீதிமன்றம் அதிரடி
Next articleகுழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம்