பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

0
213

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று மற்றும் சூரரை போற்று ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. அதையடுத்து சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா, சுதா கொங்கரா ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து சூரரைப் போற்று கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்த படம் ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் 100 ஆவது படம் என்ற பெருமையோடு அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக வெற்றிமாறன், ஏ எல் விஜய், வசந்தபாலன் உள்ளிட்ட இயக்குனர்களோடு இணைந்து வெற்றிப்பாடல்களைக் கொடுத்துள்ளார். இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர் திரைப்படத்திற்கும் இசையமைத்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் நடித்துள்ள அவர், 20க்கும்ம் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article“இந்திய அணியில் அவர் இல்லாதது எங்களுக்கு நல்லதா போச்சு…” பாக். பயிற்சியாளர் சந்தோஷம்!
Next article56 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர்…?