“கண்டா வரச்சொல்லுங்க” ஜிவி பிரகாஷ் தேடும் ஒருவர்!! வீடியோ உள்ளே!! இவரைக் கண்டால் வரச் சொல்லுங்கள்!

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒருவரை தேடி கொண்டுள்ளார். அவரைக் கண்டால் சொல்லுங்கள். அவரை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அவர் வாசிக்கும் திறன் மிகவும் அழகாக உள்ளது. அவர் மிகவும் திறமையானவர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். அவரது கைவசம் தற்போது 4 ஜி, ஜெயில், காதலிக்க நேரமில்லை, காதலியை தேடி நித்யானந்தா, பேச்சிலர், ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், என ஏராளமான படங்கள் உள்ளன. ட்ராப் சிட்டி என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷ் நடிக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.

 

பொதுவாக ஜிவி பிரகாஷின் இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. இவர் இசையமைக்கும் பாடல் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவிக் கொண்டிருக்கும். சமீபத்தில் கூட சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா உடன் இணைந்து ஜிவி பிரகாஷ் பாடிய பாடல் நம்பர்-1 ட்ரெண்டிங் ஆக போய்க்கொண்டிருக்கிறது.

 

இன்னிலையில் சாலையோரம் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர் நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ஜிவி பிரகாஷ் இவர் மிகவும் திறமையானவர். இவரை நாம் இசைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். இவர் எங்கே இருந்தாலும் வரச்சொல்லுங்கள் என்று மறுபடியும் பதிவிட்டுள்ளார். இவர் வாசிப்பது மிகவும் நுணுக்கமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

 

அதுக்கு இணையவாசிகள் கண்டிப்பாக சொல்கிறோம் என்று பாராட்டி வருகின்றனர்.

 

 

Leave a Comment