ஜி20 தாமரை சின்னம் விவகாரம்: வாய் திறந்த மம்தா பானர்ஜி.. உடனடியாக லோகோவை மாற்ற வேண்டும்! தொடரும் எதிர்ப்புக்கள்!
20 நாடுகளின் கூட்டமைப்பு தான் ஜி 20 என்று உள்ளது. இந்த அமைப்பின் பதவியானது சுழற்சி முறையில் மாற்றம் அடையும். அந்த வகையில் இம்மாதம் முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வரை இந்தியா தான் ஜி 20 அமைப்பிற்கு தலைமை பதவி வகிக்கிறது. இது குறித்து கூட்டமைப்பானது நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் ஜி-20 லோகோ மற்றும் தீம் போன்றவற்றை வெளியிட்டார்.
அதில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று கூறியதோடு லோகோ தான் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லோக குறித்து பலரும் கேள்வி எழுப்பு உள்ளனர். ஜி 20 லோகோவில் தாமரைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் பல எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
பொதுவாக காணப்படும் இந்த லோகோவில் எப்படி கட்சியின் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் லோகோ போடப்படும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அந்த வகையில் இந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி யிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதில் அவர் கூறியதாவது, இது அனைத்து நாடுகளும் சேர்ந்த ஒரு அமைப்பு என்பதால் இந்த லோகோ குறித்து வெட்ட வெளிச்சமாக எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது. அதேபோல மத்திய அரசு அவர்களின் சின்னமான தாமரையை வைத்ததற்கு பதிலாக வேறு ஏதேனும் தேசிய சின்னத்தை லோகோவாக அமைத்திருக்கலாம்.
தாமரை, அரசியல் சின்னமாக இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் இது ஓர் அரசியல் கட்சியின் சின்னம். எனவே இதனை ஜி-20 லோகோவாக வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதைப் பற்றி இந்த மாநாட்டில் நான் எதுவும் பேச விரும்பவில்லை, வேறு யாராவது இது பற்றி விவாதிக்க கூடலாம். அதேபோல சென்ற வருடம் ஜி 20 மாநாடு நடந்தது குறித்தும் இவர் தெரிவித்தார்.