தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
தனுஷ் அவர்கள் தற்சமயம் பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடிகராக முதலில் திரைக்கு வந்த போது அனைவரும் ஏளனம் செய்தனர். தற்பொழுது தனுஷ் அவர்கள் பாடலாசிரியராகவும் ,தயாரிப்பாளராக என பல முறைகளில் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது அபார நடிப்பால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் இவருக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது.
அப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் மிகவும் தத்ரூபமாக இருந்தது. மேலும் தனுஷுக்கு அப்படத்திற்கான சிறந்த நடிகர் என தேசிய விருது கிடைத்தது. அதனைய டுத்து கர்ணன் படம் வெளியானது. அப்படமும் இவருக்கு வெற்றி வாகை சூடி கொடுத்தது.அதனைய டுத்து தற்பொழுது ஓடிடியில் கலாட்டா கல்யாணம் என்ற அவரது படம் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிராற்.தற்பொழுது தெலுங்கு திரை உலகிலும் காலடி எடுத்து வைத்து வைத்துள்ளார். அந்தவகையில் வாத்தி என்ற படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க உள்ளார்.இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்க உள்ளார்.
https://twitter.com/SamyukthaaMenon
மேலும் இந்த வாத்தி படமானது இரு மொழிகளில் தயாராக உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தை சித்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக களரி திரைப்பட நாயகி சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. படத்தின் கதாநாயகி சம்யுக்தா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷுடன் எடுத்த படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அப்படத்தின் பெயரை வைத்து, வாத்தி கம்மிங் என்றும் கூறியுள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.