கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம்!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று(ஜனவரி21) தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம் கிடைத்துள்ளது.
6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் இரண்டாவது நாளான நேற்று(ஜனவரி21) மகளிர் பிரிவில் பாரம்பரிய யோகா போட்டி நடைபெற்றது.
மகளிருக்கான பாரம்பரிய யோகா போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை நவ்யா 64.75 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்த்த ஆரன்யா ஹூதைத் 64.42 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கமும், வீராங்கனை ரிது மோந்தல் 63.50 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
வாள்வீச்சு பெட்டியில் ஆடவருக்கான சப்ரே இறுதிச் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த வீரர் அர்லின் 15-14 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லக்சயா பத்சர் அவர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதையடுத்து 2ம் நாள் முடிவில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு அணி 4 தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் புள்ளிப்பட்டியலில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற டெல்லி மொத்தம் 5 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. 4 பதக்கங்களுடன் மேற்கு வங்க மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றது.