வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் வருடம் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. இந்த படத்தில் பிரேம்ஜி, திரிஷா, ராய் லட்சுமி, அர்ஜூன், வைபவ், மஹத், அஞ்சலி, ஆண்ட்ரியா என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது. சாக்லேக் பாய் லுக்கில் நல்லவராக மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்தார். அதிலும் பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கெட்டவனின் வேடம்.
அஜித்தை இப்படிப்பார்த்த ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. அதோடு, யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. Fast Furious பட ஸ்டைல் ஒருவரிடமிருந்து பணத்தை எப்படி ஸ்கெட்ச் போட்டு ஆட்டையை போடுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. படம் சூப்பர் ஹிட் அடித்து அதிக வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர்தான் வேதாளம் போல நெகட்டிவ் சேட் உள்ள கதைகளில் நடிக்கும் தைரியம் அஜித்துக்கு வந்தது. இப்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் கூட நெகட்டிவ் சேட் உள்ள கதைதான்.
இந்நிலையில். மங்காத்தா படத்தின் வெங்கட்பிரபுவுடையது இல்லை என ஒருவர் சொல்லி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. வெங்கட்பிரபுவின் அப்பா கங்கை அமரன்தான். அந்த கதையை நான்தான் எழுதினேன். இந்த கதையை வெங்கட்பிரபுவிடம் கொடுத்து நீயே எடு. கதை உன்னுடது என போட்டுக்கொள் என்று சொல்லிவிட்டேன்.
இப்படி ஒரு கதை வெங்கட் பிரபுவிடம் இருப்பதை தெரிந்துகொண்டு அஜித் நடிக்க முன் வந்தார். இது நெகட்டிவ் சேட் இருக்கும் கதாபாத்திரம். உங்களுக்கு ஓகேவா என வெங்கட்பிரபு கேட்க ‘நோ பிராப்ளம்’ என அஜித் சொல்லிவிட்டார். அப்படித்தான் மங்காத்தா படம் உருவானது’ என சொல்லியிருக்கிறார்.