கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது!!

Photo of author

By Vinoth

திருந்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது. இதற்காக அதிகாலை 1 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு சுமார் 1:30 மணியளவில் விஸ்வருப தீபாராதனை முடித்து, 2 மணியளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை 5:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார்.

அதன் பின்னர் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இதனை அடுத்து கடலில் பத்தர்கள் புனித நீராடி மாலை அணிந்து கந்தசஷ்டி விரதம் தொடங்கினர். அதன் பின்பு கோவில் முன்பு ஏராளமான பத்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். இதனை அடுத்து காலை 9 மணியளவில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் , பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை  பூஜை நடக்கிறது. இதைடுத்து மாலை 3.30 மணியளவில் மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.அதன் பின்னர்  சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். பின்னர் அம்பாள்களுக்கு பல்வேறு வாசனை  திரவியங்களால் அபிஷேகம் செய்து, அலங்காரமாக்கி தீபாராதனை நடக்கும். பின்பு சுவாமி, அம்பாள்களுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

ஆறாம் நாளான வருகிற 7-ம் தேதி வியாழக்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

7-ம் நாளான வருகிற 8-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணிக்கி மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதைடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா முடிவடைகிறது.