முருக கடவுளை வணங்கும் பக்தர்களுக்கு சஷ்டி விரதம் மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த நாள் தான் சஷ்டி விரதமாக கொண்டாடப்படுகிறது.இந்த சஷ்டி விரத நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் கோடி நன்மைகள் கிட்டும் என்பது நம்பிக்கை.
கந்தசஷ்டி விரதத்தில் முக்கியான நாள் சூரசம்ஹாரம்.இந்நாள் நவம்பர் 07 ஆன இன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளில் திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும்.இந்நாளில் முழு நேரமும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.முடியாதவர்கள் பால் மற்றும் பழம் உண்டு விரதம் இருக்கலாம்.
இந்நாளில் முருகன் திருவுருவ படத்திற்கு முன் சரவணபவ என்ற ஆறு தமிழ் எடுத்தில் நெய் தீபம் வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.
முருகனுக்கு உகந்த நெய்வேத்தியம்:
இந்த கந்த சஷ்டி நாளில் சர்க்கரை பொங்கல்,எலுமிச்சை சாதம்,புளிசாதம்,தயிர் சாதம்,தேங்காய் சாதம்,கற்கண்டு சாதம் போன்றவற்றை முருகனுக்கு நெய் வேத்தியமாக படைக்கலாம்.இதுபோன்ற வகை வகையாக நெய்வேத்தியம் படைக்க முடியாதவர்கள் வெறும் சர்க்கரை பொங்கலிட்டு முருகனை வழிபடலாம்.
இந்த கந்தசஷ்டி நாளில் முருகன் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் அல்லது நெயில் விளக்கு போடலாம்.அதேபோல் இந்நாளில் சுத்தமான நல்லெண்ணெய்,கலப்படம் இல்லாத நெய்,விளக்கு போன்றவற்றை கோயிலுக்கு தானமாக வழங்கலாம்.அதேபோல் முருகனுக்கு படைத்த நெய்வேத்தியதை பிறருக்கு தானமாக கொடுக்கலாம்.