ரசிகர்களை அதிர வைத்த காந்தாரா!! தற்பொழுது Chapter 1 ஆக மீண்டும் வருகிறது!!

Photo of author

By Gayathri

செப்டம்பர் 30, 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்த திரைப்படத்தினை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்கள் இயக்கியதுடன் மட்டுமின்றி நடித்துமுள்ளார். இந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் வரை ரிஷப் ஷெட்டி அவர்களை கன்னட ரசிகர்களை தவிர பெரிதும் வேறு எந்த மொழி ரசிகர்களுக்கும் தெரியாமல் இருந்த நிலையில், தற்பொழுது தென்னிந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகராக மாறியுள்ளார்.

காந்தாரா திரைப்படம் எடுக்கும் பொழுது இதனுடைய அடுத்த பாகம் கண்டிப்பாக வரும் என கூறிய நிலையில், தற்பொழுது அதனை வெளியிடும் தேதியானது அறிவிக்கப்பட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. காந்தாரா திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு போலவே இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்கும் என பட குழு சார்பிலும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படமானது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வெளியாகும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அதிகாரப்பூர்வமாகவே பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பல ரசிகர்களால் எப்பொழுது இந்த படம் வெளியாகும் அல்லது இதனுடைய வெளியீட்டு தேதியாவது தெரியுமா என கேட்டு வந்த நிலையில், படக்குழுவின் உடைய இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.