அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!!! அட்லி, நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!!

0
146
#image_title

அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!!! அட்லி, நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியும், இயக்குநர் அட்லி, பிரியா ஜோடியும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வாயிலாகி வருகின்றது.

மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் ஆன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு நேற்று(செப்டம்பர்19) இரவு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து முகேஷ் அம்பானி இலத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குநர் அட்லி அவர்களும் அவருடைய மனைவி நடிகை பிரியா அவர்களும், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களும் அவருடைய மனைவியும் நடிகையுமான நயன்தாரா அவர்களும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.