விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

Photo of author

By CineDesk

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

நேற்று விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக சென்ற நீர்நிலையில் கரைக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர்கள் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபடலாம் என்றும்,விநாயகர் சிலையை நீர்நிலைகளில்கரைக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசால்
அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட மக்கள்,போலீசார் அனுமதியுடன் முறையான விதிகளையும்,சமூக இடைவெளிகளையும் பின்பற்றி விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைத்தனர்.விநாயகர் சிலையை வரிசையில் நின்று ஒன்றன்பின் ஒன்றாக காவிரி ஆற்றில் கரைத்ததும் குறிப்பிடத்தக்கது.