சமீபத்திய நாட்களில் இளையராஜா தன்னுடைய பாடல்களை பயன்படுத்தக்கூடிய படங்களுக்கு காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு ஒரு புறம் அவருக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் பணத்திற்காக பாட்டை விட்ற பின்பு அதற்கான காப்புரிமை கூறுவது பாட்டை விட்ற பின்பு அதற்கான காப்புரிமை கூறுவது தவறு என பல கருத்துக்களும் எழுந்து வருகிறது.
இது குறித்த சமீபத்தில் கங்கை அமரன் பேசியிருப்பது :-
இசையமைப்பாளருக்கு 7 கோடி ரூபாய் பணம் கொடுத்து அந்த இசை வெற்றி பெறாமல் செல்கிறது ஆனால் எங்களுடைய பாடல் அனைத்தும் வெற்றியை கொடுக்கும் நிலையில் அந்த பாடலுக்கு நாங்கள் வாக்குரிமை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் எங்களுக்கு பணத்த ஆசை கிடையாது என அவர் கூறியதோடு எங்கள் பாட்டை வைத்து உங்கள் படம் ஹிட் ஆகும் பொழுது அதற்கான சம்பளத்தை எங்களுக்கு உங்களால் கொடுக்க முடியாதா என கங்கையமரம் இளையராஜாவிற்கு துணை நின்று பேசி இருந்தார்.
ஒரு வருடத்திற்கு முன் கங்கை அமரன் இளையராஜா குறித்து பேசி இருப்பது :-
அண்ணன் செய்வது அசிங்கம் என்றும் கேவலம் என்றும் எத்தனையோ எம் எஸ் டி பாடல்களை சுட்டு அண்ணன் பாட்டு போட்டு இருக்கிறார் என்றும் கங்கை அமரன் இளையராஜா அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார். அதோடு மட்டுமல்லாது தியாகராஜர் கீர்த்தனைகளை பயன்படுத்தி கூட பல பாடல்களை இயற்றியிருப்பதாகவும் இதற்கெல்லாம் அவர் பணம் கொடுத்தாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். குறிப்பாக நீ சாப்பிடுவது இரண்டு இட்லி கொஞ்சம் சாப்பாடு இல்லனா ரெண்டு சப்பாத்தி. இப்படி ஒன்று கூடிய உனக்கு காப்பரிமை பெற்று காசு வாங்கி சம்பாதிக்க வேண்டுமா என பொங்கி எழுந்ததோடு நீ செய்வது முறையல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.