ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

0
123

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் என்னென்ன புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கங்குலி இந்த தொடரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து பேசியுள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

  • ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல 4 மணி மற்றும் 8 மணிக்கு போட்டிகள் தொடங்கும். 7.30 மணிக்கு தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை.
  • நோபாலுக்காக மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகிறது.
  • டெஸ்ட் போட்டிகளில் கன்கஸன் ஏற்பட்டால் மாற்று வீரரை இறக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • ஐபிஎல் இறுதி ஆட்டம் மும்பையில் நடக்கும். அகமதாபாத்தில் நடத்துவதாக வெளியாகும் செய்தி உண்மையில்லை.
  • போட்டிகளின் அட்டவணை மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.
  • ஐபில் போட்டி மார்ச் 29 முதல் மே 24 வரை நடக்க இருக்கிறது.

பாண்டியாவின் உடல்நிலைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது ‘அவர் இன்னும் குணமாகவில்லை. அவர் தேசிய அகாடெமியில் தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்’ எனத் தெரிவித்தார்.

Previous articleதலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்
Next articleப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?