இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு!

Photo of author

By CineDesk

இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு!

CineDesk

Gas cylinder price is slightly lower this month!

இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சமையல் கேஸ் மற்றும் பயன்பாடு சிலிண்டர் விலை மத்திய எண்ணெய் நிர்வாகிகள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றனர். தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இதன் அடிப்படையில் இந்த மாதத்திற்கான விலையை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வ தேச சந்தைகள் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்துள்ளது.

இதன்படி சென்னையில் வணிக சிலிண்டர் 187 குறைந்து 2,186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 1018.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை சற்று குறைந்ததால் வணிகர்கள் பயன்படுத்தும் பயனார்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.