பள்ளியில் வாயு கசிவு!!மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்!!அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Photo of author

By Jeevitha

Chennai: திருவெற்றியூரில் உள்ள விக்டரி பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் பள்ளி திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னை திருவெற்றியூரில் கிராம தெரு பகுதியில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  படித்து வருகின்றனர். அப்போது கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட மாணவிகள் கண் எரிச்சல், வாந்தி மயக்கம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிறகு பள்ளி இன்று திறக்கப்பட்டது.  அப்போது பாதுகாப்பு உறுதி செய்யாமல் எப்படி பள்ளி திறக்கப்பட்டது என மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.  இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளின் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.

அப்போது 4 மாணவிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் பள்ளிக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த சூழலில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என பயந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.