5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்
இல்லத்தரசிகள் பெரும்பாலும் அவர்களது சமையலறையில் சுத்தமாக வைத்துக் கொள்வது அதிக அளவு ஆர்வம் காட்டுவார். அதேபோல வேலைக்கு செல்லும் பெண்மணிகளும் அவர்களுக்கு உண்டான நேரத்திற்குள் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்.
அவ்வாறு இருப்பவர்கள் சமையல் செய்யும்பொழுது அடுப்பின் மேல் எண்ணெய் பிசுக்கு உண்டாகும். இதனை சுத்தம் செய்வதே அவர்களுக்கு பெரும் வேலையாக இருக்கும்.
அந்த வகையில் சிலர் இதற்காக கடைகளில் விற்கும் மருந்து பொருட்களை வாங்கி சுத்தம் செய்வது உண்டு. ஆனால் இனி வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தியே எண்ணெய் பிசுக்கை நீக்கிவிடலாம்.
தேவையான பொருட்கள்:
1.எலுமிச்சை பழம்
2.இலவங்கம்
3.பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது ஜெல்
செய்முறை:
சுடுதண்ணீரில் எலுமிச்சம் பழம் மற்றும் லவங்கத்தை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இவைகள் கிருமி நாசினியாகவும் பயன்படும்.
இதனுடன் நம் வீட்டில் பாத்திரம் கழுவ உபயோகிக்கும் சோப்பு அல்லது ஜெல் போன்றவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழம், இலவங்க பட்டை போன்றவை ஊற வைத்திருப்பதாலும் இந்த சோப்பு தண்ணீரையும் சேர்க்க வேண்டும்.
இரண்டையும் நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பிசுபிசுப்பு உள்ள இடத்தில் தெளித்தோ அல்லது ஸ்ப்ரே செய்தோ சுத்தம் செய்யலாம்.
ஒரே நிமிடத்தில் அந்த இடம் நறுமணத்துடன் பளபளக்க தொடங்கும்.