கோலியை மீண்டும் மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர் : நெட்டிசன்கள் எரிச்சல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் பேட்டிங் வரிசை மாற்ற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 266 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில், ரோகித் சர்மா, விராட் கோலி ரொம்ப சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா அபாரமாக விளையாடி இந்திய அணியை மீட்டனர்.
இந்நிலையில், இன்று நேபாள அணியும், இந்திய அணியும் நேருக்கு நேர் மோதியது.
அப்போது, செய்தியாளர்களிடம் இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், இஷான் கிஷன் இரட்டை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நல்ல பார்மில் உள்ளார். அதனால், இஷான் கிஷனை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும். ரோகித்சர்மா ஆகியோர் நிறைய ஆட்டங்கள் விளையாடியுள்ளனர். வீரர்களை விட பார்ம் தான் முக்கியம். இஷான் கிஷன், சுப்மன் கில்லையும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். இவர்களுக்கு அடுத்து, ரோகித் சர்மா 3-வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும் விளையாடலாம்.
கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பினால்கூட இஷான் கிஷனுக்கு அணியிலிருந்து நீக்ககூடாது. என்று கூறியுள்ளார். ஒருவேளை கே.எல்.ராகுல் வந்தால், விராட் கோலியோ, ரோகித் சர்மாவோ இதே போல் மூன்று அரை சதம் அடித்த பிறகு இருவரையும் நீக்க முடியுமா என்று மறைமுகமாக விராட் கோலியை தாக்கி கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
தற்போது இவர் பேசிய தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் கவுதம் கம்பீருக்கு எதிராக கமெண்ட் செய்து வருகிறார்கள்.