மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

Photo of author

By Vinoth

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

இந்திய அணியின்  முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் மீண்டும் பேட் பிடிக்க தயாராகி விட்டார்.

இந்தியாவின் மிகச்சிறந்த லிமிடெட் ஓவர் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் போட்டித் தொடரின் சீசன் 2ல் விளையாடுவார் என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.  கம்பீர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக சில போட்டிகளையும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி 2 முறை கோப்பையையும் வென்றவர் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கவுதம் கம்பீர் “செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்க உறுதியளித்துள்ளேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்குவதை எதிர்பார்த்து உற்சாகமாக உள்ளேன். மீண்டும் களமிறங்குவதை ஒரு பாக்கியமாகவும் மரியாதையாகவும் இருக்கும். மீண்டும் உலக கிரிக்கெட்டின் மினுமினுப்புடன்,” என்று கவுதம் கம்பீர் கூறினார்.

இதுபற்றி லெஜண்ட் லீக் கிரிக்கெட் சார்பாக “2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 97 ரன்களை அடித்த கெளதமின் ஆட்டத்தை யார் மறப்பார்கள்? சீசன் 2 இல் கௌதம் மற்றும் பிற வீரர்களிடமிருந்து அதே நரம்பைக் குலைக்கும் ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” நிறுவனர் தெரிவித்துள்ளார்.