தளபதி 67-ல் இத்தனை வில்லன்களா… அதில் ஒருவராக இயக்குனர் கௌதம் மேனன்!

Photo of author

By Vinoth

தளபதி 67-ல் இத்தனை வில்லன்களா… அதில் ஒருவராக இயக்குனர் கௌதம் மேனன்!

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்க உள்ள திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

விஜய் வாரிசு படத்துக்குப் பிறகு மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குனர் லோகேஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

 இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதுபோல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவரான அர்ஜுனிடமும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகர் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. பிரபல இயக்குனர் கௌதம் மேனனை ஒரு முக்கியமான வில்லன்  வேடத்தில் நடிக்க லோகேஷ் முடிவெடுத்து இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. கௌதம் மேனன் ஒரு பக்கம் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களை இயக்கி பிஸியாக இருந்தாலும், மறுபக்கம் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தும் கல்லா கட்டி வருகிறார்.