நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!!

Photo of author

By Parthipan K

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!!

இயக்குநர் கௌதம் மேனன் அவர்கள் அடுத்ததாக நடிகர் வடிவேலு அவர்களை வைத்து நகைச்சுவை கலந்த காதல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இயக்குநர் கௌதம் மேனன், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து தற்போது நகைச்சுவை கலந்த ஒரு காதல் படத்தை எடுக்கத் தயாராகி வருகிறார். அதற்கான கதை திரைக்கதை பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இதில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நல்ல கணிசமான சம்பளத்துடன் இதற்காக நடிக்க வடிவேல் அவர்கள் ஒரு கணிசமான தொகை முன் பணமாக பெற்றுள்ளார்.

இதனிடையே சமீபத்தில் கமலை வைத்து கௌதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ படம் ரீ ரிலீஸ் ஆனது. அப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. ஸ்க்ரிப்ட் பணிகளை முடித்த கௌதம் மேனன், தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் கமல், அவரது இயக்குநர் வினோத் படம், மணிரத்னம் படம், லோகேஷ் கனகராஜ் படம் என ஏகப்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளதால் அதை முடித்துவிட்டுத்தான் இப்படத்தை பற்றி யோசிக்கவுள்ளார். அதனால் டேட் எப்போது கிடைக்கும் என்று முடிவாகவில்லை. முன்னதாக ‘விக்ரம்’ படத்தை அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் ஓ.கே. சொன்ன கமல், அதன் பிறகு அவரிடம் பேசவில்லை. கிட்டத்தட்ட அப்படம் டிராப் என கிசுகிசுக்கின்றனர். அதனால் சற்று பயத்தில் இருக்கும் கௌதம் மேனன், நிச்சயம் அவர் டேட் கிடைத்து விடும் என்ற நம்பிக் கையில் உள்ளாராம். மேலும் கமல் படத்தை தொடங்குவதற்குள் வடிவேலுவின் படத்தை தொடங்கி கடைபிடிப்பை முடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கௌதம் மேனன் அவர்கள் தனது முதல் படருமான மின்னலே படத்தை நகைச்சுவை கலந்த காதல் படமாக இயக்கி, அதில் வெற்றி கண்டுள்ளார். அதே பாணியை பின்பற்றி இந்த படத்தையும் இயக்க கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.