இந்திய அணி தற்போது இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை பும்ரா விடம் கொடுத்துவிட்டு தன் சொந்த வேலையை பார்த்துக் கொள்ளட்டும் என கூறியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
ஆஸ்திரேலியா உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்து இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி வருகின்றன. அவர் தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதால் அவர் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
இது குறித்து சுனில் கவாஸ்கர் ஒரு விவாத மேடையில் கூறுகையில், ஒரு பெரிய தொடரின் முதல் போட்டியில் ஒரு கேப்டன் விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று, இந்திய அணி தான் முக்கியம் ஆனால் அணியை விட சொந்த காரணங்கள் முக்கியம் என்றால் அவர் தற்போது உள்ள துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா வை கேப்டனாக அறிவிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக இந்தியா-நியூசிலாந்து இடையிலான போட்டியில் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி இந்த நிலையில் ஒரு கேப்டன் இல்லாமல் அடுத்த தொடரை ஆடுவது அணிக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.