‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில்

0
161

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில்

இந்திய வீரர்கள் பிறநாட்டு டி 20 தொடர்களில் விளையாடினால் அது அற்புதமாக இருக்கும் என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தார்.

இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கான தொடர்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவை ஐபிஎல் போல பிரபலமாகவோ அல்லது பணமழை கொட்டும் தொடர்களாகவோ இல்லை.

இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்தில் ‘இந்திய வீரர்கள் பிறநாட்டு தொடர்களில் விளையாடினால் அது அற்புதமாக இருக்கும்’ எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “பிறநாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடினால் அவர்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்கும் என நினைக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார். கவாஸ்கரின் இந்த பதில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

Previous articleடீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்!
Next articleஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை!