ஐந்தாவது படத்தில் களமிறங்கும் கவின்!! ஹீரோயின்கள் யார் யார் தெரியுமா!!

0
180
Gavin to debut in fifth film!! Do you know who the heroines are!!
Gavin to debut in fifth film!! Do you know who the heroines are!!

ஐந்தாவது படத்தில் களமிறங்கும் கவின்!! ஹீரோயின்கள் யார் யார் தெரியுமா!!

விஜய் டிவியில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி.

இதில் ஹீரோவாக நடித்த கவின் மக்களின் செல்ல பிள்ளையாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

 இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது, குறிப்பாக பெண்கள் மனதை தனது சிரிப்பால் கொள்ளை கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது.

எனவே, டாடா மற்றும் லிப்ட் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தற்போது கவின் அவருடைய ஐந்தாவது படத்தில் களமிறங்க உள்ளார்.

இப்படத்தை இயக்குனர் எலன் இயக்க உள்ளார். மேலும் இதில் முதலாவதாக தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகி தற்போது கவின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். மேலும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளார்கள்.

அதாவது சினிமாவில் டிரெண்டில் இருக்கும் ஹீரோயின்களான இவானா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரும் நடிக்க உள்ளார்கள். இப்படம் குறித்த அப்டேட் கூடிய விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து விட்டது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே, கவின் தனது சினிமாத்துறையில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்று அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கவின் வருகின்ற ஆகஸ்ட் இருபதாம் தேதி தன்னுடைய தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

Previous articleமீண்டும் வெடிக்கும் மணிப்பூர் கலவரம்!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!
Next articleஇனி போலீசாருக்கு விடுமுறை இல்லை!! காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!!