காயத்திரி ரகுராம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை போட்ட கண்ணாடி கதவு! இது மோசமான ரசனை.. உங்கள் வீட்டு பெண்களிடம் காட்டுங்கள்! 

Photo of author

By Rupa

காயத்திரி ரகுராம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை போட்ட கண்ணாடி கதவு! இது மோசமான ரசனை.. உங்கள் வீட்டு பெண்களிடம் காட்டுங்கள்!

பாஜகவில் சமீபத்தில் ஓபிசி பிரிவு மாநில பொது செயலாளர் சூர்யா சிவா மற்றும் சிறுபான்மை அணி தலைவி டெய்சி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் ஆடியோ வெளியே வந்தது. இது  வெளியே வந்ததும்,அந்த ஆடியோ குறித்த பல கட்சி சார்பாக கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து காயத்ரி ரகுராம் தனது கருத்துக்களை தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்ததற்கு இவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு விட்டார் என அண்ணாமலை கூறி,இவர்  கட்சியில் இருந்து ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து சூரிய சிவா மற்றும் டெய்சி இருவரையும் அழைத்து சமரசம் பேசி பிரச்சனை ஓய்ந்த நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து பல தனியார் ஊடகங்களிலும் இது குறித்து பேட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடத்தப்பட்ட பேட்டியில் காயத்ரியிடம் , அண்ணாமலை ஓரிடத்தில் எனது அலுவலகம் முழுவதும் கண்ணாடியால் போடப்பட்டது, இது காயத்ரி மற்றும் குஷ்பூ போன்றோருக்காக போடப்பட்டது என்று ஏன் கூறினார் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு காயத்ரி, என்னை அசிங்கப்படுத்த தான் அவ்வாறு போடப்பட்டுள்ளது என்ற வகையில் பதில் கூறினார். இந்த வீடியோ வைரலான நிலையில், வலதுசாரியை சேர்ந்த ஸ்ரீராம் சேஷாத்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ரீ ட்வீட் செய்து உள்ளார். அதில் , அண்ணாமலை கண்ணாடி கதவு போடப்பட்டது தான் பலருக்கும் எரிச்சலாக உள்ளது. அவ்வாறு அண்ணாமலை, கண்ணாடி கதவு போடவில்லை என்றால் குற்றம், பழி என்று அடுக்கடுக்காக நடந்திருக்கும்.

அண்ணாமலை போலீஸ் என்பதால் தான் இப்படிப்பட்டவர்களை அறிந்து இவ்வாறான முடிவை செய்துள்ளார் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதற்கு காயத்ரி ரகுராம்,தனது  ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவரவர் குடும்ப பெண்களின் பெயரை குறிப்பிட்டு நீங்கள் இவ்வாறு திருப்திப்படுத்தி கொள்ளலாம். தலைவர் போல தான் மற்ற கெல்லிகளும் என்ற வகையில் கடுமையாக கூறி பதிவிட்டுள்ளார்.