விஜய்க்கு ஆதரவு அளித்த காயத்ரி ரகுராம்! நுழைவு வரி சர்ச்சைகள்!
நடிகர் தளபதி விஜய் அவர்கள் வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ் ராய், என்ற காரை இறக்குமதி செய்திருக்கிறார். இந்தக் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடர்ந்த வழக்கைக் கோர்ட்டில் தள்ளுபடி செய்து, ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளன. கோர்ட்டில் நீதிபதி சொன்ன வார்த்தைகள், நடிகர்கள் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக நடந்துகொள்ளக் வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி பரபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு என்னவென்றால், நடிகர் விஜய் எப்பொழுதுமே ஏழை மக்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத்தான் இருந்து வருகிறார். முதலமைச்சரின் கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கி இருக்கிறார்,ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கியிருக்கிறார்,அவரது ரசிகர்களின் குடும்பங்களுக்கு பல நிதி உதவிகளையும் செய்திருக்கிறார்.
ஆகையால் ஒருவரின் செயல்பாடுகளை வைத்து அவரின் குணத்தை அவதூறு செய்யக்கூடாது, என்று சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவு அளித்து வந்திருக்கிறார்,நடிகை காயத்ரி ரகுராம்.நீதிமன்றத்தில் நடந்த விஷயம் நீதிமன்றத் தோடு முடிந்துவிட்டது,அதை மறுபடியும் கிளற வேண்டாம் என்று கூறியிருக்கிறார், மற்றும் விஜய் செய்த உதவிகளை நாம் எப்பொழுதும் மறக்கக்கூடாது நீதிமன்றத்தில் நடந்த விஷயத்தை வைத்து அவர் செய்த நல்ல நன்மைகளை அவமதிக்கக் கூடாது என்று கூறியிக்கிறார். காருக்கு நுழைவு வரியில் இருந்து தான் விலக்கு கேட்டது நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் வரியை கட்டி விடப்போகிறார் அவ்வளவுதானே, இதற்கு ஏன் இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் என நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.