மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

0
170

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

கலகலப்பும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மிதுன ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :

செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் இருக்கக்கூடிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும்.

ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் மீது இருந்துவந்த சில வதந்திகளுக்கு முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலருடைய தனவரவுகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுடைய செயல்பாட்டில் அவர்களின் விருப்பமில்லாமல் தலையிட வேண்டாம். பிறமொழி பேசும் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

ராகு கேது பெயர்ச்சியினால்பொருளாதாரம் :

தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் வீண் விரயங்களை குறைத்து சேமிப்பை மேம்படுத்த இயலும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.

உடல் மற்றும் ஆரோக்கியம் :எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதிய வகை உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். துரித உணவுகளை தவிர்ப்பது அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும்.

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :தம்பதியர்களுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விடாப்பிடியான சில முயற்சிகளுக்கு பின்பு எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களிடம் கருத்துக்களைப் பரிமாறும் பொழுது நிதானம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு

வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாக அமையும். வித்தியாசமான யுக்திகளை பயன்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். உயர்நிலைக் கல்வியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியில் எதிர்பார்த்த உயர்வு காலதாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சூழ்நிலைக்கேற்ப உடன் இருக்கக்கூடியவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வேலை நிமிர்த்தமான பொறுப்புகள் ஓரளவு குறையும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அனுபவமும், வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ராகு கேது பெயர்ச்சியின் நன்மைகள் :ராகு கேது பெயர்ச்சியின் மூலம் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளும், செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலைகளும் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சியில் கவனம் தேவை:

பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சலும், குழந்தைகளிடத்தில் பொறுமையை கையாள வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது.

இதற்கான வழிபாடுகள்:

தினந்தோறும் ராகு கேதுக்களுடன் இருக்கக்கூடிய விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் சிந்தனைகளின் போக்கில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.

Previous articleசெல்வம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது யார்?
Next articleஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை! முழு விவரங்கள் இதோ!