மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
135
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். கடமை உணர்ச்சி தவறாதவர்கள் நீங்கள். வேலைகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. வருமானம் உங்கள் உழைப்பிற்கு ஏற்ப கண்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய பொறுப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். கலைத் துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடித்து பாராட்டுக்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வித் திறன் அதிகமாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்

Previous articleஒரு தக்காளி போதும் 5 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்! 
Next articleமுழங்கால் வலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை மட்டும் செய்து பாருங்கள்!