மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன் !! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
112
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன் !! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இன்று கலஸ்தர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷம் அதிகரிக்கும்.

குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் தொடரும். பொருளாதாரம் முன்னேற்றமாக இருக்கும். வருமானம் வந்து சேர்வதில் இருந்து வந்த காலதாமதம் விலகும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய மனை புதிய வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிம் ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயக பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு கண்டிப்பாக இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk