மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

0
181
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிதி அற்புதமாக இருப்பதால் சொத்து சேர்க்கை உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக கூட்டாளிகள் உங்களுக்கு அனுபவ ஆலோசனைகளை வழங்குவார்கள். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எல்லா விதத்திலும் முன்னேற்றங்கள் கூடி வரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில நன்மைகளை இன்றைக்கு நீங்கள் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் நிம்மதி காண வேண்டிய நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here