Astrology

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலப்படும் நாள்!

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலப்படும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவுகள் பலப்படும் நாள். குற்றால உறவினர்கள் இன்று வருகை தருவார்கள் அவர்கள் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்ப உறவுகள் பலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அற்புதமான அந்நியோனியம் உண்டாகும். வருமானம் நீங்கள் நினைத்தபடி இருப்பதால் செலவுகளை துணிந்து செய்வீர்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர் வருகையால் இல்லம் கலைகட்டி இருப்பதை கண்டு மனமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Leave a Comment