மிதுனம்- இன்றைய ராசிபலன்! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!
மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.
இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். நிதி அற்புதமாக உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும்.
கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு ஒன்று மேம்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட உதவிகள் தாராளமாக வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் ஓயும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமாக செல்லும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.
நண்பர்கள் உறவினர்கள் உட்படுத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கிய மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக்கி ஆனந்தமாக இருப்பார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.