மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!

0
178
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள். தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் தன வரவு கண்டிப்பாக வந்து சேரும்.

குடும்ப உறவு பக்கபலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் சில முதலீடுகளை துணிந்து செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here