மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!
மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். உங்களுக்கு மனதில் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவி உறவினர்கள் தொலைபேசி மூலம் சந்தோஷமான செய்தி ஒன்றை தருவார்கள்.
பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளையும் நிர்வாகிகளையும் கவர்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்து சலுகைகளையும் பெறுவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் சில அதிரடி நுணுக்கமான திட்டங்களை அறிவித்து புதிய வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். அரசியலில் இருக்கும் அன்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.
குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் ஆரோக்கியமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் இருந்த அன்பர்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்கி புத்துணர்ச்சியோடு செயல்படுவார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.