மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

0
183

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள். சந்திர பகவான் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் கொஞ்சம் செலவுகள் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வீர்கள். கணவன் மனைவியிடையே சிறப்பான சூழ்நிலை உண்டாகும்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்திச் செய்யும் எண்ணம் மேலோங்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை நிலவும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சரவேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here