மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

Photo of author

By Selvarani

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள். செலவுகள் அனைத்தையும் சுபச் செலவாக மாற்றிக் கொள்வது நல்லது. கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவு அற்புதமான புரிதல் உணர்வு மேம்படுவதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் இடமாறுதல் சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வரலாம் என்பதால் வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.