மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள்!!

0
237

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள். நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் எல்லாம் கிடைக்கும் வாய்ப்புகள் இன்றைய தினம் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்ளாத மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித நிம்மதி தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்க பெண்கள் உற்றார் உறவினர்களின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். விளையாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பற்றாக்குறை அகலும் நாள்!!
Next articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொடங்கிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here