மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியத்தோடு செயல்படக்கூடிய நாள்!!

0
89
#image_title

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியத்தோடு செயல்படக்கூடிய நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தைரியத்தோடு செயல்படக்கூடிய நாள். சகாய ஸ்தானமாகிய முயற்சி ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எடுக்கும் காரியங்கள் அற்புதமாக நிறைவேறும். வருமானம் இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரக் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வந்து சேரும்.

குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகத்தில் உள்ள பெண்கள் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபயில்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani