மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!!

0
241
#image_title

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள். இன்றைய தினம் சிறு சிறு குழப்பங்கள் இருந்தாலும் அதனை தெளிவு நிலைக்கு கொண்டு வந்து சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

வருமானம் எங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலைகள் குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எந்த ஒரு முயற்சியும் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முக்கியமாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சில நன்மை தரும் செயல்கள் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும் நாள்!!
Next articleஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க! ஒரு டம்ளர் வெந்நீர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here