மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

0
229

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைய தினம் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் இருப்பதால் இருப்பதால் எதிலும் ஒருவித தடங்கள் வந்து சேரும். பொறுமையாக இருந்தீர்கள் என்றால் நன்மை. கணவன் மனைவிக்கு சிறுசிறு அபிப்பிராய வேதங்கள் எல்லாம் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக வியாபாரிகளையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ கண்மணிகள் கல்வியில் முன்னேற்றம் காண அரும்பாடு பட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலை துறையை சேர்ந்த நண்பர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடுகளை தயவு செய்து இன்றைய தினம் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சற்று

கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு மனதில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள்!!
Next articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here