மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெளிவட்டாரத்தில் மரியாதை உயரும் நாள்!!

0
81
#image_title

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெளிவட்டாரத்தில் மரியாதை உயரும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வெளிவட்டாரத்தில் மரியாதை உயரும் நாள். நீங்கள் செய்த நல்லது உங்கள் மரியாதையை உயர்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் எல்லாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் வேலை பளு கண்டிப்பாக குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றியைக் காண்பார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து நீங்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் காத்திருக்கிறது. அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜெயிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் அற்புதமாக வந்து சேரும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபா வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.