ஈபிஎஸ் பேச்சால் பரபரப்பு! வெடித்தது மோதல்!

Photo of author

By Sakthi

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தின்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதிமுக கூட்டணியில் அமைதியான சூழ்நிலை கிடையாது என்றே தெரிய வருகின்றது. கூட்டணியில் உள்ள தேமுதிக, மற்றும் பாஜக, பாமக, போன்ற கட்சிகள் அதிகமான இடங்களை கேட்டு வருகின்றனர். இதன் காரணமாக, தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 15ஆம் தேதி அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதோடு தேர்தல் பணிகள் போன்றவற்றை முன்னெடுப்பது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையிலே, சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில், உரையாற்றிய தமிழக முதலமைச்சர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தாலும் சிறுபான்மையினர் நலனை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும், அதிமுகவின் அடிப்படை கொள்கையே சிறுபான்மையினர் நலன் காப்பது தான் எனவும் தெரிவித்தார்.

இதன்காரணமாக, மேடையில் அமர்ந்திருந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போன்றோர் முதல்வரின் இந்த இந்தப் பேச்சால் அதிர்ச்சி அடைந்ததாக தெரியவருகின்றது. அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்கள்.

அப்போது தேர்தல் பரப்புரை போல கிறிஸ்துமஸ் விழாவில் எவ்வாறு பேசலாம் என்றும் கட்சியிடம் தெரிவித்து முறைப்படி தானே பரப்புரை மேற்கொள்ள வேண்டும். என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் தேர்தல் நேரத்தில் இது போன்று உரையாற்றுவது தவறு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். அமைச்சர்களும் அதையே வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையிலே, இம்மாத மே அதிமுக செயற்குழு , பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவிக்கிறார்கள். ஆனாலும் அதற்கு ஓ பன்னீர்செல்வம் இசைவு அளிக்கவில்லை ஏனென்றால் கட்சியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பும் என்று அவர் யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.