தமிழகத்திற்கு 1600 கோடி ஒதுக்கீடு! ஜெர்மனி பிரதமர் அறிவிப்பால் எடப்பாடிக்கு ஜாக்பாட்

Photo of author

By Parthipan K

தமிழகத்திற்கு 1600 கோடி ஒதுக்கீடு! ஜெர்மனி பிரதமர் அறிவிப்பால் எடப்பாடிக்கு ஜாக்பாட்

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.

அவருக்கு டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்பு இந்தியா,ஜெர்மனி அரசுகளுக்கு இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

இரு நாட்டு பிரதமர்களும் இதில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளுக்கு இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. மேலும் இரு நாட்டு தலைவர்களின் சார்பில் 5 கூட்டு பிரகடனங்களும் வெளியிடப்பட்டன.

ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இன்று காலை டெல்லியில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்,.

இருநாடுகளுக்கிடையான கூட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பசுமை நகர்ப்புற இயக்கத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மேலும் தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். டெல்லியில் காற்று மாசுபாட்டால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை பயன்படுத்தினால் பாதிப்பை ‌கட்டுப்படத்தலாம் என்று ‌தெரிவித்தார்.

ஏற்கனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக போக்குவரத்துதுறை, ஜெர்மனி பிரதமரின் இந்த அறிவிப்பு தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.