வருமானம் இல்லை, கவனிக்க ஆளும் இல்லை: முதியவர் செய்த திடுக்கிடும் காரியம்

0
127

வருமானம் இல்லை, கவனிக்க ஆளும் இல்லை: முதியவர் செய்த திடுக்கிடும் காரியம்

வேலை இல்லை, தன்னை கவனிக்க ஆள் யாரும் இல்லை என்பதால் ஜெர்மனியிலுள்ள 62 வயது முதியவர் ஒருவர் செய்த காரியத்தால் நீதிமன்றமே அதிர்ச்சி அடைந்துள்ளது. ஜெர்மனை சேர்ந்த எபிஹார்டன் என்ற 62 வயது முதியவர் கணினி அறிவியல் அறிஞராக வேலை பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் கிடைத்த பணத்தை ஐரோப்பிய நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து செலவு செய்துவிட்டார். அதன் பின்னர் இவருக்கு வருமானமும் இல்லை, அவரை கவனிக்க ஆளும் இல்லை.

எனவே ஏதாவது குற்றம் செய்துவிட்டு சிறைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தார். சிறைக்கு சென்றால் அங்கு உணவு தங்குவதற்கு வீடு, உடை ஆகியவை கிடைக்கும் என்பதால் இவர் ஏதாவது ஒரு குற்றத்தை செய்ய முடிவு செய்து தன்னுடைய காரில் மிக வேகமாக சென்று சைக்கிளில் வந்தவர் மீது மோதினார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்தனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் நீதிபதியிடம் அவர் கூறியபோது ’எனக்கு சொந்த வீடு வருமானம் உறவுக்காரர்கள் யாருமில்லை என்பதால் இந்த குற்றத்தை செய்ததாகவும் இனி தன்னை சிறை அதிகாரிகள் கவனித்து கொள்வார்கள் என்றும் கூறியதை அடுத்து நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Previous articleநீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு: மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி
Next articleசெல்பி மோகத்தால் காயமடைந்த பிக்பாஸ் நடிகை!